காந்திபுரத்தில் அரங்கேறிய கொடூரம்! மனைவியை கொன்று வாட்ஸ்-ஆப் ஸ்டேடஸ் வைத்த கணவன்!

கோவை: கோவையில் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் விடுதியில் தங்கி இருந்த மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன், இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பிரியாவுக்கும் இசக்கி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கணவனை விட்டுப் பிரிந்த பிரியா கடந்த ஆறு மாத காலமாக காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்.

டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை கணவன் பாலமுருகன் கோவைக்கு வந்து பிரியா தங்கி இருந்த விடுதிக்குச் சென்று பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் பிரியாவை சாராமாரியாக வெட்டிப் படுகொலை கொலை செய்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக ரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே கொலை செய்த பின் மனைவியின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்த பால முருகன், அந்த சடலுத்துடன் செல்பி எடுத்துள்ளார்.

மேலும், அந்த செல்பியை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேசில் துரோகத்திற்கு சம்பளம் மரணம் என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரியாவின் உடலைக் கைப்பற்றி, கணவர் பால முருகனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp