கோவை: எடப்பாடி பெரிய தலைவர் அல்ல, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு செங்கோட்டையன் வருகை புரிந்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கோபிசெட்டிபாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது செங்கோட்டையன் பற்றி மறைமுகமாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் யார் என்ன வேண்டமானாலும் சொல்லட்டும் என்ன பொறுத்தவரை நான் தெளிவாக உள்ளேன் என்றார்.
தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள் என்றும் எடப்பாடி பெரிய தலைவர் அல்ல, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என பதில் அளித்தார்.


