தளிர் கீரைகள் குறித்தான ஒரு நாள் பயிற்சி கோவையில் வழங்கப்படுகிறது…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தளிர்கீரைகள் வளர்ப்பு மற்றும் மதிப்புகூட்டல் குறித்த பயிற்சி அளிக்கபட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கோயம்புத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் காய்கறி அறிவியல் துறையின் சார்பாக வரும் 16.12.2025 அன்று தளிர்கீரைகள் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

Advertisement

உடல்நலத்திற்கு தேவையான பெருமளவு சத்துத் தேவையை தளிர்கீரைகள் நிறைவு செய்கின்றன. தளிர் கீரைகளிலிருந்து பெறப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஊட்டச்சத்து நிறைந்தவையாகவும் உடல் நலத்தை மேம்படுத்துவதாகவும் உள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு தளிர்கீரைகள் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த திறன் பயிற்சி தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில் செயல்முறை சாகுபடித்திறன்கள், ஊட்டச்சத்து நன்மைகள், உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள், தர நிலைநிறுத்தம், நீடித்த வருவாய், மதிப்பு கூட்டல், வணிகத்துக்கு வழிகாட்டல், சந்தை வாய்ப்புகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பயிற்சிக் கட்டணமாக ரூபாய் 2000 (சரக்கு மற்றும் சேவை வரி 18 விழுக்காடு உள்பட) செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
காய்கறி அறிவியல் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641 003.

மின்னஞ்சல் : vegetables@tnau.ac.in

கைபேசி : 89036 94612

தொடர்பு நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 9.00 முதல் மாலை 5.00 வரை) ஆகும்.

Recent News

Video

Join WhatsApp