அரசின் ஆன்மிக சுற்றுலா; கோவையில் இருந்து காசி பயணிம்!

கோவை: அரசின் ஆன்மிக சுற்று பயணத் திட்டத்தில் கோவையில் இருந்து 30 பேர் காசி சென்றனர்.

தமிழ்நாடு அரசு ஆன்மிகப் சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு வயது மூப்பின் காரணமாகவும் இறைதரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 920 பக்தர்களை கடந்த 3 ஆண்டுகளில் அழைத்து சென்றுள்ளது.

Advertisement

இதற்கிடையே நடப்பாண்டில் 600 பக்தர்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு தமிழகம் முழுவதிம் இருந்து 600 பக்தர்களையும் ஆன்மிகப் பயணம் அழைத்து செல்ல உத்தரவிட்டது. அதற்கான செலவினத்தொகை ரூ.1.50 கோடியினை அரசு ஒதுக்கியது.

இதை தொடர்ந்து ராமேசுவரத்தில் இருந்து காசி வரை ஆன்மிகப்பயணம் இன்று முதல் 12ம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. கோவையில் கோணியம்மன் கோயிலில் இருந்து 30 பக்தர்கள் இன்று இந்த ஆன்மிகப் பயணத்தை தொடங்கினர்.

இதனை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிசெல்வன், மாவட்ட அறங்காவலர் தலைவர் ராஜமணி, கோனியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன், உறுப்பினர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Recent News

Video

Join WhatsApp