கோவை: கோவையில் இண்டிகோ விமானம் ரத்து கட்டணங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பயணிகள் புக்கிங் செய்த கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களாகவே நாடு முழுவதும் இண்டிகோ நிறுவன விமானங்கள் பலதும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றர். அதே சமயம் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு விமான நிறுவனங்கள் அவர்களது விமான கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசானது இண்டிகோ விமான நிறுவனம் பயணிகளின் கட்டணங்களை திரும்பி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பயணிகளின் புக்கிங் கட்டணங்களை திருப்பி தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.
கோவை விமான நிலையத்திலும் இண்டிகோ நிறுவனம் ஆன்லைன் மூலமாக பெரும்பாலான பயணிகளுக்கு கட்டணங்களை திருப்பி வழங்கி வருகிறது. இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வந்தாலும் குறைவான விமானங்கள் இயக்கப்படுவதால் சில பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்து பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். சில பயணிகள் சந்தேகங்களை கேட்டறிந்து கொள்வதற்கும் கோவை விமான நிலையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து வருகின்றனர்.
இண்டிகோ நிறுவனம் பயணிகள் விமானம் ரத்தானால் கட்டணங்களை திருப்பி வழங்குகிறது, அல்லது வேறு நேர விமானத்திற்கு புதிய டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


