கோவை விமான நிலையத்தில் கண்ணாடி கதவை உடைத்த வெளியே வந்தவரால் பரபரப்பு!

கோவை: கோவை விமான நிலையத்தில் கண்ணாடி கதவை உடைத்த வெளியே வந்த பயணி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு 29 முதல் 31 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் ஓய்வு நேரத்தை 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டது.

Advertisement

இந்த உத்தரவை விமான போக்குவரத்து இயக்குனரகம் திரும்ப வரவேண்டும் என கூறி இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து இயக்குபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையிலும் பைலட்டுகள் பணிக்கு வராததால் கடந்த 5 நாட்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த உத்தரவை விமான போக்குவரத்து இயக்குனரகம் ரத்து செய்த போதும் இன்றும் 6வது நாளாக, கோவையிலிருந்து 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் 2 விமானம் உள்பட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மாற்று பயணம் மூலம் வெளி மாநிலம் சென்றனர்.

இதற்கு இடையே இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. இதிலிருந்து பணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது பயணி ஒருவர் அவசரமாக வெளியே வந்தார்.

Advertisement

அதில் தனியாங்கி கண்ணாடி கதவில் அவரது சூட்கேஸ் பட்டு கண்ணாடி கதவு உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் அமீது என்பது தெரிய வந்தது.

அவர் அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக சூட்கேஸ் பட்டதால் கண்ணாடி கதவு உடைந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்து அவரது விவரங்களை பெற்று அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Recent News

அதிமுகவின் ரிசல்ட் என்னவென்று அப்போது தெரியும்- கோவையில் செந்தில்பாலாஜி பேட்டி…

கோவை: அதிமுகவின் ரிசல்ட் என்னவென்று தேர்தல் எண்ணிக்கைக்கு பிறகு தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி...

Video

Join WhatsApp