இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல், காவலர் மீது புகார்…

கோவை: கோவையில் இந்து முன்னனி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய உதவி காவல் ஆணையர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உதவி காவல் ஆணையர் தாக்கியதில் இந்து முன்னணி நிர்வாகி காயமடைந்த நிலையில் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளனர்.

Advertisement

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையிலும் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு அமைப்பினரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். காந்தி பார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த இந்து முன்னணி அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

அப்பொழுது தனியார் மண்டபத்தில் இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு அடைக்கப்படும் பொழுது அங்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் மகேஸ்வரன் இந்து முன்னணி பொறுப்பாளர் சதீஷை தாக்கியதாக தெரிகிறது. கழுத்துப் பகுதியில் தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது திரும்பி உள்ளதாகவும் எனவே காவல் உதவி ஆணையர் மகேஸ்வரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Recent News

Video

Join WhatsApp