கோவை: திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதிமன்றமும் , ஆர்எஸ்எஸ் கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக CPI முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், CPI முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மத்திய அரசானது தொழிலாளர் துரோக சட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவசர அவசரமாக இந்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கின்றது என்றார். இதை எதிர்த்து இன்று இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.
19 தொழிலாளர் சட்டங்களை முற்றிலும் அழித்து விட்டு , 4 தொகுப்புகளாக சட்டங்களை கொண்டு வந்து இருக்கின்றனர் என கூறிய அவர் இந்த புதிய சட்டம் எந்த தொழிலாளர்களுக்கு பலனளிக்காது என தெரிவித்தார்.
தொழில் சங்கத்தின் அங்கீகரத்தை புதிய சட்டத்தால் ரத்து செய்து விட முடியும் என்றும்
சுரங்கம், இராசாயன தொழில்சாலைகளில் பெண்களை ஈடுபடுத்த கூடாது என இருக்கும் நிலையில் புதிய சட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்தலாம், மேலும்
தொழிலாளர் நல நிதி 10 சதவீதமாக குறைக்கப பட்டுள்ளது என்றார். கட்டுமான வாரியத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிதி முழுவதும் ஒன்றிய அரசுக்கு புதிய சட்டம் மூலம் மாற்றப்படுகின்றது, தொழிலாளர் துரோக சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கின்றது என்றார்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக இந்த சட்டங்களை கொண்டு வந்து இருக்கின்றனர் என கூறிய அவர் இது ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை கொண்டு வருகின்றது, தொழிலாளர்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றது என்றார். இந்த தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அது வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் டெல்லியில் நடத்த விவசாயிகள் போராட்டம் போல, ஒரு போராட்டத்தை ஒன்றிய அரசு சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.
பாஜக கடவுளின் பெயரால் தீவிரவாதத்தை செயல்படுத்த முயல்கின்றனர், திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசும் ,நீதிமன்றமும் ஏற்கனவே நிராகரித்த ஒன்றை, இப்போது மீண்டும் சாமிநாதன் என்ற நீதிபதி மூலம், கலவரத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குறிப்பிடும் இடத்தில் இருப்பது தீபக்கல்லே கிடையாது, அது அளவு கல்,
மக்கள் பிளவுபடுவதை எந்த ஜனநாயகவாதியும் ஏற்க மாட்டான் என தெரிவித்தார்.
கலவரத்தை கொண்டு வர வேண்டும் என நீதிமன்றமும் , ஆர்எஸ்எஸ் கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் எனவும்
தமிழக அரசு கவனத்துடன் இதில் செயல்பட்டுள்ளது, இது போன்ற கலவரங்களை தமிழக மக்கள் ஆதரிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் கலவர சூழலை ஏற்படுத்த முயல்கின்றார். சட்டம் ஒழுங்கு பிரச்சினையைற ஏற்படுத்த முயல்கின்றார் என்றார். கோவையில் அரசு உதவி பெறும் கல்லூரியில்,
சரஸ்வதி நாகரீகம் என்ற தலைப்பி்ல் கருத்தரங்கு நடத்த இருக்கின்றனர் , இதில் ஆளுநர் கலந்து கொண்டு பேச உள்ளார் என கூறிய அவர், அவர் என்ன பேசுவார் என அனைவருக்கும் தெரியும் இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது என புகார் மனு கொடுத்து இருக்கின்றோம், மாநில அரசு இந்த கருத்தரங்கம் அனுமதி அளிக்க கூடாது என்றார். அதையும் மீறி கூட்டம் நடத்தப்பட்டால் அனைத்து கட்சிகளின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்ள விவகாரத்தில்
எடப்பாடி பழனிச்சாமி
கொள்கையை கைவிட்டு ஆர்.எஸ்.எஸ் சொல்வதை ஏற்கின்றார்,
நீதிபதிகளை எச்.ராஜா எப்படி பேசினார்,
இதை எப்படி அனுமதிக்கின்றனர் என தெரியவில்லை என்றார்.
திருப்பரங்குன்றத்தில்
வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டது என தெரிவித்த அவர்,
தீர்ப்பை விமர்சிப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு எனவும் தெரிவித்தார்.
நீதிபதியும்,ஆர்.எஸ்எஸ் கும்பலும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர் என நான் சொல்கின்றேன்,
சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தொடர்பான கேள்விகளை செல்வபெருந்தகையிடம் கேட்டால் சரியாக இருக்கும் என தெரிவித்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி 10 ஆண்டு காலமாக இருக்கின்றது, இது கொள்கை கூட்டணி எனவும், இதற்கு முன்பு கூட்டணிகள் ஓரு வருடத்தில் உடைந்து விடும் , ஆனால் 10 ஆண்டுகளாக இந்த கூட்டணி இருக்கின்றது என தெரிவித்தார்.


