படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அது குறித்து நடிகர் ரஜினி மனம் திறந்துள்ளார்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரும் இடத்தை பிடித்த படங்களில் ஒன்று படையப்பா. 1999ஆம் ஆண்டு வெளியான இந்த படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத கதாபாத்திரத்தை வழங்கியது. கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில், ரஜினிகாந்துடன், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், நளினி, சௌந்தர்யா, சிவகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
செல்வந்தராகப் பிறந்த படையப்பா குடும்பப் பிரச்சனையில் தனது சொத்துகளை இழந்து, சவால்களை நேர்மையாக எதிர்கொண்டு மீண்டும் தனது வாழ்க்கையை எப்படி சீராக்குகிறார் என்பதை நோக்கி இந்த கதைக்களம் நகரும்.

இதனிடையே தன்னை ஒருதலையாக காதலிக்கும் நீலாம்பரியை எப்படி கையாள்கிறார், வயது முதிருந்த காலகட்டத்தில் நீலாம்பரியை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மிக அழகாக காட்சிப் படுத்தி இருப்பார்கள்.
ரஜினி டீ-ஷர்ட் வாங்க…!


இதனால் இப்படம் பயங்கர ஹிட் அடித்தது. இன்றும் தொலைக்காட்சிகளில் இப்படம் போடும் போது, முதன்முறையாக பார்ப்பது போலவே உணர்வைக் கொடுக்கும் படம் இது.
இந்த நிலையில், ரஜினி திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக படையப்பா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஜினி டீ-ஷர்ட் வாங்க…!


அதன்படி, வரும் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாள் அன்று இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து ரஜினி மனம் திறந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெண்கள் தியேட்டர் கேட்டை எறிகுதித்து பார்த்த படம் அது. அன்றைய காலகட்டாத்தில் நீலாம்பரி கேரக்டரை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு வதந்தி பரப்பினார்கள். ஆனால் இப்படத்தை பார்த்துவிட்டு, படம் நல்லா இருக்கு என்று ஜெயலலிதா சொன்னார்” என்று கூறியுள்ளார்.
ரஜினி பேசிய வீடியோவை இங்கே காணலாம்



