அதிர்ச்சி ரிப்போர்ட்; கோவையில் பாதசாரிகள் பலியாவது நாட்டின் சராசரியை விட அதிகம்!

கோவை: கோவை மாநகரில் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு மிகத் குறைவாக உள்ளதைக் காட்டும் வகையில், போலீசாரிடம் இருந்து ஆர்டிஐ வழியாக பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை மாநகரில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மொத்தம் 232 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 86 பேர் பாதசாரிகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மொத்த உயிரிழப்புகளில் 37 சதவீதம் பாதசாரிகள் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

கோவை மாநகரில் கடந்த 10 மாதங்களில் நடைபெற்ற 971 விபத்துகளில் 280 அதவாது 28.83 சதவீத விபத்துகள் பாதசாரிகளைச் சுற்றியதே எனவும் ஆர்டிஐ தகவல் கூறியுள்ளது.

TO buy HouseHold Cleaning Products Click on the Below

நாட்டில் பாதசாரிகள் உயிரிழப்பு 20 சதவீதம் தான். ஆனால் கோவையில் 37 சதவீதமாக உள்ளது. இது பாதசாரிகளுக்கான பாதுகாப்பு குறைப்பாடுகளை காட்டுகிறது.

Advertisement

மேலும், பொதுமக்களுக்கு சாலையை கடக்க பெலிக்கன் சிக்னல்கள் மட்டும் போதாது, மக்கள் பாதுகாப்பாகச் சாலையை கடந்து செல்ல சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலங்கள் கட்டுவது அவசியம் எனவும் காவல்துறை ஆர்டிஐ.,யில் பதிலளித்துள்ளது.

அத்தகைய வசதி தேவைப்படும் இடங்களாக அண்ணா சிலை, லக்ஷ்மி மில்ஸ், ஆர்கே மில்ஸ், பன் மால், விமான நிலையம், சின்னியம்பாளையம், காந்திபுரம், உக்கடம், சிந்தாமணி, கவுண்டம்பாளையம், துடியலூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம் ஆகிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதற்கிடையே அவினாசி ரோடு மேம்பால திட்டத்தில் 5 சுரங்கப்பாதைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.15 கோடி, மற்றும் காந்திபுரம் பாலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.15 கோடியும் சில காரணங்களை காட்டி அதிகாரிகள் அதனை பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

பாதசாரி வருகை அதிகமுள்ள இடங்களில் சுரங்கப்பாதை இல்லாததால், போலீசார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பாதசாரிகள் பாதுகாப்பு குறைபாடுகளை உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழுவிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Recent News

Video

Join WhatsApp