கோவை: தேர்தல் வெற்றி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியது நிச்சயம் நடக்கும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள
பாஜக அலுவலகத்தில் , முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைச்சர் கே.என்.நேருவின் துறை மீது தொடர்ந்து முறைகேடுகள் வெளிவரும் வண்ணம் உள்ளது எனவும், அவரது துறையில் முறைகேடுகள் குறித்து ஏற்கனவே பேசி இருக்கின்றோம் ஆனால் இது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
டிசம்பர் 3 ம் தேதி அமலாக்க துறை மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கின்றனர் என்றும்,
மத்திய அரசு பணத்தில் கட்டப்படும் திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது, 1020 கோடி ரூபாய் ஊழல் என அமலாக்க துறை கடிதம் அனுப்பி இருக்கின்றது என்றும்,
அதில் அதிர்ச்சியான விஷயம் பார்ட்டி பன்ட் என்று கூறி 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வசூல் செய்து இருக்கின்றனர் என கூறினார்.
888 கோடி ரூபாய் முதல் ஊழல் பொறியாளார் நியமனமத்தில் நடந்துள்ளது என சாடிய அவர், இரண்டாவது ஊழலில் 7.5 முதல் 10 சதவீதம் வரை பணம் வாங்கி இருக்கின்றனர் என்றார். மேலும் அந்த பணம் துபாய்க்கு செல்கிறது என அமலாக்க துறை தெரிவித்து இருக்கிறனர் என்றார். இந்த அமலாக்க துறை புகாரை FIR ஆக பதிவு செய்தால்ப்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
SIR பட்டியலில் 12.5 வாக்காளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது , 80 லட்சம் வாக்காளர் வரை நீக்கப்பட்டு இருக்கின்றனர், 2026 தேர்தலை பொறுத்த வரை சுத்தமான தேர்தலாக இருக்கும் என்றார்.
நீதிபதி சுவாமிநாதன் மீது இன்பீச்மென்ட் கொண்டு வந்துள்ளனர், இதுவரை 10 பேருக்கு இன்பீச்மென்ட் கொடுத்து இருக்கின்றனர் , ஆனால் நீதிபதி சுவாமிநாதன மீது சொல்லப்பட்டது போல யாருக்கும் சொல்லபடவில்லை என்றார். நீதிபதி சுவாமிநாதன்
75,000 வழக்குகளை தீர்த்து வைத்தவர், நேர்மையானவர் இந்த இம்பீச்மென்ட் மோசனை
3 பேர் கொண்ட குழு விசாரிக்கும், பின்னர் வாக்கெடுப்பில் இவர்களால் வெற்றி பெற முடியாது என்றார்.
விதை சட்டம் குறித்து தவறான தகவலை பரப்புகின்றனர் என்றும்,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி முதலில் கொண்டு வந்தனர், பாஜக அரசு வந்த பின்பு கடுகு மட்டும் மரபணு மாற்றம் செய்ய பட்டது, ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இது தவிர மரபணு மாற்ற பயிர்கள் வராது, விதை சட்டத்தில் சில விதி முறைகளை கொண்டு வந்து இருக்கின்றது, இதில் விவசாயிகள் உள்ளே வரமாட்டார்கள், பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார். விவசாயிகள் எந்த விதையையும் வாங்கி விற்கலாம், விவசாயிகள் பயப்பட தேவையில்லை என்றார்.
கோவையில் OPS யை ஒரு விழாவில் சந்தித்தேன், அப்போது பேசி கொண்டோம்,ப்
டிடிவி தினகரன் கோவை வந்த போது வீட்டிற்கு சாப்பிட அழைத்தேன் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக எடப்பாடி இருக்கின்றார்,
தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற வேண்டும், தேமுதிக, பா.ம.க வரும் போது வலிமையாக இருக்கும், இதை தலைவர்கள் பார்த்து கொள்வார்கள் என்றார். இன்னும் அதிக வலிமையாக கட்சிகள் வெளியில் இருக்கின்றனர்,
வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணி இருக்க வேண்டும் அதிமுக பொதுக்குழுவில் அவர்கள் பேசுகின்றனர், அவர்கள் பேசுவதை தவறாக பார்க்கவில்லை, NDA என வரும் போது அதை வலிமைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அமித்ஷா தமிழகத்திற்கு வருவதை மாநில தலைவர் உறுதிபடுத்துவார் என்றும், அமித்ஷா விரைவில் வருவார், எப்போது வருவார் என்பதை மாநில தலைவர் கூறுவார் என்றார்.
பாஜக மாநில தலைவர் தோற்பார் என தவெக செங்கோட்டையன் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு,
தனிப்பட்ட முறையில் செங்கோட்டையன் மென்மையானவர்,
அவர்களுக்கும் எங்கள் மாநில தலைவருக்கும் இடையே கருத்துபோர் உள்ளது, அதனால் இதை அப்படியே விட்டு விடலாம் என தெரிவித்தார்.
பாஜக போலி ஓட்டு போட மாட்டோம், போலி ஓட்டு போடுபவர்களுக்கு தான் SIR யில் பிரச்சினை,
நேரு மீதான புகாரில் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது ஏன் என்பது தான் கேள்வி எனவும் தெரிவித்தார். மகளிர் உரிமை கொடுப்பது, அதில் அதிக பேரை சேர்ப்பது, பொங்கல் பணம் கொடுப்பது போன்றவை முதல்வரின் கடைசி அஸ்திரங்கள்
ஆட்சிக்கு வந்த பின்பு கொடுக்காத பழைய பாக்கிகளையும் சேர்த்து பெண்களுக்கு கொடுக்க வேண்டும் ,அதை நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
அடுத்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை இப்போதைக்கு 4 முனை தேர்தல் என தெரிவித்த அவர், 210 தொகுதிகள் வெல்வோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கின்றார், அந்த எண் நிச்சயம் வரும் எனவும் தெரிவித்தார்.
பாஜக விற்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு, இன்னும் காலமிருக்கிறது,
அமலாக்க துறை கடிதம் விவகாரத்தில்
பொது நலவழக்கிற்கும் வாய்ப்பிருக்கிறது , இந்த செய்தியாளர் சந்திப்பு கூட அதற்கு ஒரு காரணம், மக்கள் மன்றத்தில் பத்திரிக்கைகள் மூலம் அமைச்சர் நேரு விவகாரதரதை கொண்டு சென்ற பின்பும் நடவடிக்கை இல்லாததால் வழக்கு தொடர்ந்தோம் என பொதுநல வழக்கில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய அமைச்சரவை அலுவலகத்தினை அதிகம் பயன்படுத்துவது தமிழக எம்.பிகள் தான் டெல்லி அரசியல் வேறு , தமிழக அரசியல் வேறு என்றார். மத்திய அமைச்சர்கள் இங்கு வரும் போது எதிரிகளை போல பார்க்கின்றனர் என்றார். தூய்மை பணியாளர் விவகாரத்தில் ஒப்பந்தாரர்களை வெளியேற்றி விட்டு, முதலில் இருந்து கொண்டு வந்தால் மட்டுமே சரி செய்ய முடியும் தூய்மை பணியாளர்களுடன் நாங்கள் இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே கல் கிடையாது, அது தீப தூண்தான் என்றார். சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தகுந்த நபர் யார் என்று பார்த்துதான் மக்கள் வாக்களிப்பார்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை நோக்கி வெற்றி வாய்ப்பு இருக்கின்றது என தெரிவித்தார்.



