இடையர்பாளையத்தில் வீட்டில் விபசாரம்; பெண்கள் 4 பேர் கைது!

கோவை: கோவையில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் இடையர்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய பெண் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.

பின்னர் இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபசாரத்திற்கு அழைத்த அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் தடாகம் பகுதியை சேர்ந்த 57 வயது பெண் என்பதும், அவர் இடையர்பாளையம், பழனியம்மாள் லே அவுட் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 27, 30, 40 வயது பெண்கள் 5 பேரை பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பெண்களையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Recent News

Video

Join WhatsApp