கோவையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: பொங்கல் தொகுப்புடன் 5000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்

கல்வி உதவித் தொகையை ஒன்றாம் வகுப்பு முதல் வழங்கிட வேண்டும், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp