அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய குழுக்கூட்டம் கோவையில் கூடுகிறது!

கோவை: அகில இந்திய கட்டிட கட்டுமானத் தொழிலாளர் மகா சம்மேளனம் (ஏஐடியுசி) தேசியக் குழு கூட்டம் வரும் ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் கோவையில் கூடுகிறது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தக் கூட்டத்தில் தேசிய குழுவில் உள்ள 101 உறுப்பினர்களும், ஏஐடியுசி சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், தேசிய செயலாளர் வகிதா நிஜாம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், ஏஐடியுசி.,யின் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மத்திய ஒன்றிய அரசு தொழிலாளர் நல சட்டங்களை முடக்கிவிட்டு தொழிலாளர்களுக்கு விரோதமான 4 புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழக அரசு ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வரக்கூடிய இந்த சூழ்நிலையில் இந்த சங்கத்தின் தேசிய குழுக்கூட்டம் கோவையில் நடைபெறுகிறது.

அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தை சிறப்புற நடத்தவும், கூட்டத்திற்கு வருபவர்களை வரவேற்கவும், தங்க வைக்கவும் ஒரு வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் படி கோவை ஜீவா இல்லத்தில் நேற்று காலை நடைபெற்ற கூட்டத்தில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு குழு கூட்டத்திற்கு கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் வரவேற்பு குழு தலைவராக திருப்பூர் எம்பி சுப்பராயன், செயலாளராக தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளராக கோவை செல்வம், மற்றும் வரவேற்பு குழு துணைத் தலைவர்களாக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், சிவசாமி,

தங்கவேல், திருப்பூர் சேகர், செல்வராஜ், மணிபாரதி, சாந்தி சந்திரன், சந்திரன் சண்முகம் உள்ளிட்டோரும், துணைச் செயலாளர்களாக பழனிசாமி, அஷ்ரப் அலி, கோட்டை நாராயணன், புருஷோத்தமன், குணசேகர், சந்திரசேகரன், மோகன், சண்முகம், எஸ்ஐஎச்எஸ் காலனி ஆறுமுகம், ரவீந்திரன், திருப்பூர் கணேசன், பாலகிருஷ்ணன், நந்தினி உள்ளிட்டு 65 பேர்கள் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp