கோவை கல்லூரி மாணவி வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையம் அருகில் கடந்த மாதம் 2-ந் தேதி கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேரை பீளமேடு போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கைதான 3 பேரும் நீதிபதி விஜயா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இது பாலியல் தொடர்பான வழக்கு என்பதால் மகளிர் கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு நீதிபதி விஜயா ஒத்திவைத்தார்.

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp