கோவையில் பஞ்சு மில்களில் உற்பத்தி குறைப்பு போராட்டம்!

கோவை: உற்பத்தி செய்யும் நூல்களுக்கு உரிய விலை கிடைக்கவும் கழிவுப் பஞ்சு விலையை கட்டுப்படுத்தவும், கோரி கழிவு பஞ்சு மில்களில் உற்பத்தி குறைப்பு போராட்டம் தொடங்கியது.

தமிழ்நாட்டில் கழிவு பஞ்சியில் இருந்து நூல் தயாரிக்கும் 600 மில்கள் உள்ளன. இந்த மில்களில் நூற்பாலைகளில் இருந்து வரும் கழிவு பஞ்சுகளை வாங்கி சுத்திகரித்து மறுசுழற்சி செய்து நூல்களாக மாற்றி கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

கழிவு பஞ்சின் மில்களில் ஒரு நாளைக்கு 25 லட்சம் கிலோ காட்டன் நூல் உற்பத்தியும் 15 லட்சம் கிலோ 40 வகையான கலர் நூல் உற்பத்தியும் செய்து வருகின்றன. இந்த நூல்கள் மூலம் மருத்துவத் துணி, நைட்டி, லுங்கி, டவல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. தற்பொழுது கழிவு பஞ்ச விலை கிலோவுக்கு ரூபாய் 8 வரை அதிகரித்து இருப்பதால், இந்த மில்லுகள் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன.

கழிவு பஞ்சு மில்களில் தயாரிக்கப்படும் நூல்களுக்கு உரிய விலை கிடைக்காமல் கடந்த ஒரு மாதமாக நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கழிவு பஞ்சை விலையை குறைக்க கோரி நேற்று முதல் உற்பத்தி குறைப்பு போராட்டத்தை மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தொடங்கி உள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறும் போது,

கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூல் விலை குறைந்துவிட்டது, நூல் உற்பத்தியாகும் அளவுக்கு விற்பனை நடக்காததால் விலையை குறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றும், கழிவுபஞ்சு விலை உயர்வு, நூல் விலை குறைவு காரணமாக இந்த மில்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

வருகிற 31 ஆம் தேதி வரை உற்பத்தி குறைப்பு செய்யப்படும் கழிவுப் பஞ்சுக்கு ஏற்றுமதி வரி விதித்து, மில்லுகளுக்கு குறைந்த விலையில் கழிவுபஞ்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

கழிவு பஞ்சின் விலையை குறைத்து, நூல் விலையை அதிகரித்தால் மட்டுமே வரும் காலங்களில் தொழிலை நஷ்டம் இன்றி செய்ய முடியும் எனவே இவை நடைமுறைக்கு வரும் வரை 50% உற்பத்தியை குறைத்து. இந்த மீல்களை நஷ்டத்தில் இருந்து காப்போம். என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முதல் கோவை மாவட்டத்தில் 80 க்கும் மேலான மில்களில் உற்பத்தி குறைப்பு போராட்டம் தொடங்கியது.

Recent News

Video

Join WhatsApp