கோவை: SIR குறித்து மத்திய அரசு அதிகாரி கோவையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கோவையில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் குறித்து மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைச் செயலாளரும் சிறப்பு பார்வையாளருமான குல்தீப் நாராயணன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இது குறித்தான ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை செயலாளர் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான சிறப்பு பார்வையாளருமாக நியமிக்கப்பட்டுள்ள குல்தீப் நாராயணன் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளும் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.

