கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது…

கோவை: புதிய தொழிலாளர்கள் சட்டத் தொகுப்புகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள நான்கு புதிய சட்டத் தொகுப்புகளை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், புதிய தொழிலார்கள் சட்டத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த சட்டங்களால் தொழிற் சங்க உரிமைகள் இருக்காது, 8 மணி நேர வேலை, குறைந்த பட்ச கூலி, பணபலன்கள் என எதுவும் இருக்காது என்றும் 100 ஆண்டு காலம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என தெரிவித்தனர். மேலும் இந்த தொழிலாளர் நல சட்டங்கள் இந்துத்துவ திணிப்போடு கொண்டு வரப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

Recent News

Video

Join WhatsApp