கோவை: அலுமினிய தயாரிப்பில் கடைபிடிக்கப்பட வேண்டிய குறித்தான கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.
இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் அலுமினியம் மற்றும் அலுமினியம் அலாய் தயாரிப்புகளில் கடைபிடிக்க வேண்டிய தர கட்டுப்பாடுகள் குறித்த கருத்தரங்கம் சுங்கம் பகுதியில் உள்ள இந்திய வார்ப்பட (Foundry) தொழில் கழக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோவையைச் சேர்ந்த வார்ப்பட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொறியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் விஞ்ஞானி வி.ரமேஷ் வரவேற்புரையாற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விஞ்ஞானி ஜி.வினித்குமார், IS 617:2024 தர விதி மற்றும் பரிசோதனைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து விஞ்ஞானி சுரேஷ்குமார் கோபாலன், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், விஞ்ஞானி ரகு ஜோஸ்னா பிரியா இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணையதள சேவைகள் குறித்தும் விளக்கினர்.
இக்கருத்தரங்கில் வார்ப்பட செயல்முறைகள் மற்றும் அலுமினியம் தயாரிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய தர முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

