கோவை: கோவையில் உதவி பேராசிரியர் தேர்வு தொடங்கியது.
இன்று தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இந்த தேர்வானது நடைபெற உள்ளது.
அதன்படி கோவையில் 20 தேர்வு மையங்களில் உதவி பேராசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக காலை 7:30 மணி அளவில் தேர்வு மையங்கள் திறக்கப்பட்ட நிலையில் 8:30 மணிக்குள் அனைவரும் தேர்வறைகளுக்குள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு எழுத வந்தவர்கள் 8:30 மணிக்குள் தேர்வறைக்குள் சென்றனர்.
தேர்வு எழுத வருபவர்கள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், உள்ளிட்ட மின்னனு பொருட்களை எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்ட நிலையில் உடைமைகளை பரிசோதித்த பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

