அமெரிக்க பெண்ணை மணந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை! – VIDEO

கோவை: அமெரிக்காவில் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் கோவையைச் சேர்ந்த இளைஞர் அந்நாட்டு பெண்ணை இந்திய கலாசார முறைப்படி கோவையில் திருமணம் செய்து கொண்டது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ராமன் நம்பீசன் மற்றும் உமா தம்பதியர். இவர்களது மகன் வாசுதேவன்.

இவர் அமெரிக்க நாட்டில் உள்ள ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே வாசுதேவன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கரோலின் கஸாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்தியா வந்த இருவருக்கும் கோவை கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

வாசுதேவன் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் கேரள முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் அமெரிக்காவில் இருந்து வந்த பெண்ணின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

கேரள கலாச்சார முறைப்படி பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்புடன் நடைபெற்ற திருமண விழாவில் பட்டு வேட்டி, புடவை அணிந்து அமெரிக்க குடும்பத்தினர் கலந்து கொண்டது காண்போரின் கவனத்தை ஈர்த்தது.

வெளிநாட்டில் வசித்தாலும் தங்கள் கலாச்சாரத்தை மறக்காமல் திருமணத்தை நடத்தியுள்ள வாசுதேவன் குடும்பத்தினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp