கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கு சில்வர் அண்டாவை பரிசு பொருளாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு இவ்வாறான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கோவையில் தேர்தலை முன்னிட்டு 90 பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்கடம் பகுதியில் பழைய குடோன் ஒன்றில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்படும் சில்வர் அண்டா பரிசு பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

சுமார் 90க்கும் மேற்பட்ட சில்வர் அண்டாக்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...