நேருக்கு நேர் மோதி பறந்த பைக்குகள்… சின்ன வேடம்பட்டியில் அதிர்ச்சி விபத்து… வீடியோ

மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன். அவர் சரவணம்பட்டி பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் தனது மனைவியை அலுவலகத்தில் இறக்கிவிட்டு விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே எதிர் திசையில் தேனியைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான சரவணன் என்பவரும் தனது பைக்கில் வந்துள்ளார்.

இருவரது வாகனங்களும் சின்ன வேடம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னே சென்ற கார் ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது, இருவரது வாகனங்களும் நேருக்கு நேர் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், இருவரும் தூக்கியெறியப்பட்டனர். சரவணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேகநாதன் கை கால் முறிவு ஏற்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியூள்ளன.

Recent News

Video

Join WhatsApp