கோவையில் சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு கோடிகணக்கில் அபராதம்…

கோவை: கோவையில் சட்ட விரோதமாக இயங்கிய 185 செங்கல் சூளைகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம், தடாகம் பள்ளத் தாக்கில் உள்ள கிராமங்களில் சட்ட விரோதமாக செங்கல் சூளைகள் இயக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் சட்ட விரோதமாக இயங்கிய 185 செங்கல் சூளைகள் கடந்த 17.3.2021 அன்று வருவாய்த் துறை, சுரங்கத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் மூடி சீல் வைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து இந்த செங்கல் சூலைகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான இழப்பீடு விதிக்க வலியுறுத்தி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், சுரங்கம் மற்றும் புவியியல் துறைக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி தமிழ்நாடு வாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் இழப்பீட்டை மதிப்பீடு செய்து 185 செங்கல் சூலைகளுக்கு தனி, தனியாக சுமார் ரூபாய் 32 லட்சம் அளவுக்கு செலுத்துமாறு உத்தரவுகளை பிறப்பித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் இழப்பீடு உத்தரவுகளை ரத்து செய்ய கோரி செங்கல் சூளை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்குகளை விசாரித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 185 செங்கல் சூலைகளுக்கு விதித்த சுற்றுச்சூழல் இழப்பீடு உத்தரவுகளை நிறுத்தி வைத்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்த வழிகாட்டுதல்களின்படி சுற்றுச்சூழல் இழப்பீடு மதிப்பீட்டை மறுவறை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான இழப்பீடு மதிப்பீட்டை நீதிமன்ற உத்தரவின்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களின் படியும் விரிவாக மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரைகளின் அடிப்படையில் புது டெல்லியை சேர்ந்த எரிசக்தி வள நிறுவனத்தை (டெரி) நியமித்தது அந்த நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒவ்வொரு செங்கல் சூளைகளுக்கும் விதிக்கப்பட வேண்டிய சுற்று சூழல் இழப்பீடாக ரூபாய் 4.39 லட்சம் முதல் ரூபாய் 12.28 கோடி வரை மதிப்பீடு செய்து வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.

இதை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மூன்றாம் தேதி சம்பந்தப்பட்ட செங்கல் சூளைகள் அவற்றின் சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

Recent News

Video

Join WhatsApp