கோவை: ஜனநாயகன் பற்றி பேசுவதெல்லாம் வேஸ்ட் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில், தனியார் மகளிர் கல்லூரியில் பாஜக வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை வானதி சீனிவாசன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் முழக்கங்களை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், சுற்றுப்புற சூழல், கார்பன் நியூட்டலுக்காக இன்று வாக்கத்தான் நடைபெற்றது என்றார். கார்பன் நியூட்டன் கோவைக்கு வெர்ச்சுவல் மரம் நடவு எனப்படும் செல்போனை குறிப்பிட்ட நேரம் சுவிட்ச் ஆப் செய்து கார்பன் அளவை குறைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் 92 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இணைந்ததாக தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சுற்றுப்புற சூழல் உலகம் வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றிலிருந்து மாறுபட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மனிதனும் அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார். எனவேதான் பஞ்சாமிர்தம் என்ற ஒரு மிகப்பெரிய சொல்யூஷனை உலகம் முழுவதும் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
கார்பன் நியூட்ரல் கோயம்புத்தூர் என்பது மாநில அரசு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே துவக்கிவிட்டது என்றும் ஆனால் மாநில அரசிடம் இருந்து சட்டமன்ற உறுப்பினராக எங்களுக்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார். எங்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளவும் இல்லை என்று குற்றம் சாட்டிய அவர் மாநில அரசாங்கம் ஒரு பெயருக்கு தான் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் தவிர அதனை முன்னெடுத்துச் செல்வதில்லை என தெரிவித்தார்.
கார்பன் நியூட்டலில் மிகப்பெரிய பங்காற்ற வேண்டியது உள்ளூர் நிர்வாகங்கள் என்று குறிப்பிட்ட அவர் ஆனால் மாநில அரசு இதற்காக நிதி ஒதுக்குவதில்லை என்றும் இதற்கான எந்த ஒரு வழிகாட்டுதலும் மாநில அரசிடம் இல்லை என்று விமர்சித்தார். மாநில அரசுக்கு பெயர்களில் இருக்கக்கூடிய விளம்பர மோகம்தான் உள்ளது என்றும் அதனை செயல்படுத்துவதில் எந்த ஒரு அக்கறையும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சரத்குமார், இந்த நிகழ்ச்சி சிறப்பான நிகழ்ச்சி என்றும் அதிகமான மாணவர்கள் இதில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனநாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்று குறித்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ளது குறித்தான கேள்விக்கும் அரசியல் தலைவராக அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது குறித்தான கேள்விக்கு, சென்சார் போர்டு தற்பொழுது மட்டும் ஒரு படத்தை நிறுத்தவில்லை என்றும் இதற்கு முன்பே பல்வேறு படங்களை நிறுத்தி உள்ளார்கள் என்று தெரிவித்தார்.
தக் லைப் படத்திற்கும் நடந்தது என்று குறிப்பிட்ட அவர் விஜயின் படத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இதுபோன்ற நடந்தே விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே என தெரிவித்தார். இது அரசியல் இல்லை என்றும் அனைத்தும் அரசியல் ரீதியாகவே தான் நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சென்சார் போர்ட் அந்த படம் சரியாக இல்லை என்று நினைக்கிறது என்று தெரிவித்த அவர் அரசியல்வாதிகள் யாரும் சென்சார் போர்டில் இடம் பெறவில்லை என தெரிவித்தார். ஜனநாயகன்படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது அதேபோன்று எனக்கும் தான் உள்ளது என தெரிவித்த அவர் படம் எடுப்பது மிகப்பெரிய கடினம் ஆனால் அது சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் தணிக்கை துறை அமலாக்க துறை ஆகியவற்றை கொண்டு அடக்க பார்க்கிறார்கள் என்ற கருத்திற்கு, எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை எதை அரசியலாக வேண்டும் இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றில்லாமல் உண்ண உணவு உடுக்க உடை இருப்பதற்கு இடம் வேலை வாய்ப்பு என்று பல்வேறு விஷயங்கள் உள்ளது அதிலெல்லாம் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இது ஒரு ஜனநாயக நாடு என்றும் ஜனநாயகத்தில் சினிமாவைப் பற்றி பேசுவது தான் முக்கியமா என்றும் கேள்வி எழுப்பினார். இது குறித்து காங்கிரஸ் கட்சியினரும் பேசி வருவது தொடர்பான கேள்விக்கு திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் அவர்கள் பேசி தான் ஆக வேண்டும் என தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி இதன் மூலம் அனுகூலம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கலாம் எனவும் கருத்து தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பல்வேறு படங்கள் ரிலீஸானது Dude படத்திற்கு பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது, புஷ்பா போன்ற படங்களும் வெளியானது அதனை நிறுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர் அந்த படங்களில் என்ன சொல்ல வந்தார்கள் என்றுதான் சென்சார் பார்த்தது என்றும் Honor Killing is Wrong என்று தெரிவித்தார். எது மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று நினைக்கிறார்களோ எதை புகுத்த நினைக்கிறீர்கள் என்று சொல்லும் பொழுது சென்சார் அதனை கூர்ந்து கவனிக்கிறது. என தெரிவித்தார்.
மேலும் நான் அடித்த அடங்காதே படமும் இன்னும் வெளியாகவில்லை என்றும் அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை அது அரசியல் சதியா என்று கேள்விய அவர் பதில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள் ஏற்புடையது அல்ல என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் அதனால் அந்த படம் வெளியாகவில்லை என தெரிவித்தார். ஜனநாயகன் படத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் இதனை ஒரு செய்தியாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க நினைப்பது அங்கிருந்து இங்கு வந்த எனக்கு வேதனையாக இருக்கிறது என தெரிவித்தார்.
சென்சார் போர்டுக்கு நான் என்றென்றும் குரல் கொடுத்தது கிடையாது என்று தெரிவித்தார் மேலும் என்னுடைய அடங்காதே திரைப்படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க கூறுங்களேன் என்றும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது வெளியாக உள்ள பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்று தான் வந்தது என்று தெரிவித்தார்.
மேலும் நான் அரசியலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கு உழைப்பே தர வேண்டும் என்று நினைப்பதாகவும் என்னுடன் பயணித்த நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து மந்திரியாக அமர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன் என தெரிவித்தார்.
தமிழகம் மீது 10 லட்சம் கோடி கடன் உள்ளது அதனை எவ்வாறு அடைக்க முடியும், சைனா பிரேசில் இந்தியா எல்லாம் ஆயுளை ரஷ்யாவில் இருந்து வாங்க 500 மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது டிரம்ப் அதனை ஆதரித்துள்ளார் அப்படி என்றால் 500 சதவிகிதம் வரி போட்டால் தொழில்துறை நாசமாகிவிடுமா என்று கேளுங்கள் இதெல்லாம் மக்களுக்கு தெரியாமல் உள்ளது அதை விட்டுவிட்டு ஜனநாயகன்படத்தை எல்லாம் பற்றி பேசுவது வேஸ்ட் என தெரிவித்தார்.
விஜய் அசைக்க முடியாத அரசியல் தலைவராக உருவாகி வருகிறார் என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது குறித்தான கேள்விக்கு, தேர்தலுக்கு வந்து நின்ற கேட்க வேண்டும் என தெரிவித்தார். விஜய் பாஜகவிற்கு வருகிறாரா என்ற கேள்விக்கு எனக்கு தெரியாது என பதிலளித்தார்.

