கோவை: போத்தனூரில் போதை மருந்து போதை ஊசிகளுடன் சுற்றிய மூன்று வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக் குமார், மற்றும் உதவி ஆய்வாளர் திருவாசகம் மற்றும் போலீசார் போத்தனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை சோதனை செய்தபோது 5 கிலோ கஞ்சா, 200 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், 30 போதை ஊசிகள், ஆகியவை இருந்தது தெரியவந்தது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 3 செல்போன்கள் மற்றும் பைக் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் மைல்கல் பாரதிநகரை சேர்ந்த ஷாருக்கான்(28), ஸ்ரீராம் நகரை சேர்ந்த யாசர் மூஸாபாத் ( 30), மற்றும் குனியமுத்தூர் காந்திநகரை சேர்ந்த லத்தீப் (29) என்ன தெரிய வந்தது.
அதன் பிறகு போலீசார் 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

