கோவை: பாஜக தேசிய செயல் தலைவருக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபின்க்கு கோவை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அவருக்கு பாஜக மகளிர் அணியினர் பூக்கள் தூவி வரவேற்றனர். சிலர் தாமரை மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.
வரவேற்பு நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, எல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிதின் நபின் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் Professional Connect நிகழ்ச்சி, கோவை மண்டலம் சக்தி கேந்திரா நிகழ்ச்சி, லீ மெரிடியன் ஹோட்டலில் மையக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு டெல்லி புறப்படுகிறார்.

