கோவை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக தொழில் சார் வல்லுணர்வு பிரிவு ஆரம்பிக்கப்பட்டது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு பாஜக தொழில்துறை வல்லுநர் பிரிவு சார்பில், Professionals Connect 2026 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மத்திய பெட்ரோல்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி காலை கலந்து கொள்கிறார்.
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் மாலை கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
முன்னதாக இதனை துவக்கி வைத்து பேசிய நயினார் நாகேந்திரன், நல்ல முறையில் எல்லாம் அமைந்துள்ளது என்றும் பிரதமர் மட்டும் தான் இங்கு இல்லை என்றார்.
பிரதமர் நமக்கு கிடைத்த வர பிரசாதம் என்று குறிப்பிட்டார். வாழ்ந்தவர் எல்லாம் வரலாறாக ஆக வேண்டும் என்று சொன்னால் அது சாதனை படைத்தால் தான் அந்த சாதனையை படைத்தவர் பிரதமர் என்றும் பொருளாதாரத்தில் 4வது இடத்தில் வைத்துள்ளார்.
3 வது இடத்தில் முன்னேற்ற ஏற்பாடுகளை செய்து வருகிறார் நிதி அமைச்சர் மூலம் நம்முடைய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி இருக்கக்கூடிய பொறுப்பு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உண்டு என்றார்.
பிரதமர் Start up India, Making India ,Makeup india போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார், 2030 ஆம் ஆண்டு நம்முடைய பொருளாதாரத்தை பத்து ட்ரில்லியன் அளவிற்கு உயர்த்துவதற்கும் 2047-இல் சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதற்கும் பிரதமர் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார் என்றார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தொழில் சார் வல்லுணர்வு பிரிவு ஆரம்பிக்கப்பட்டது கிடையாது என்றும் நான் வந்த பிறகு இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனால் ஒவ்வொருவரின் அறிவும் ஆலோசனையும் பயன்பெறும் என்றார்.
வரவுள்ள பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பதை இந்த பகுதியிலிருந்து இந்த பகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் அல்லது இந்தியாவிற்கும் என்னென்ன தேவைகள் எப்படி எப்படி செய்தால் அது எந்த துறையாக இருந்தாலும் சரி மருத்துவத்துறையாக இருந்தாலும் சரி ஆடிட்டர் துறையாக இருந்தாலும் சரி வழக்கறிஞர் பிரிவு துறையாக இருந்தாலும் சரி உங்களுடைய ஆலோசனைகள் பயன்பெறும் என்றார்.
உங்கள் கருத்துக்கள் இந்திய பாராளுமன்றத்தில் எதிரொளிக்கும் என தெரிவித்தார்.
உங்களுக்கு என்று பல பேர் உள்ளனர் நீங்கள் சொன்னால் பலர் ஓட்டு போடுவார்கள் ஓட்டு போடுவது என்றால் யாருக்கு ஓட்டு போட வேண்டும் எப்படிப்பட்ட அவருக்கு ஓட்டு போட வேண்டும் நாட்டின் நன்மைக்காக உழைத்துக் கொண்டிருப்பவர் பிரதமர்
பிரதமர் தொடர்ந்து நாட்டின் நன்மைக்காக பாடுபட வேண்டும் என்றார்.
நாம் பல ஆண்டு காலம் அடிமையாக வாழ்ந்திருக்கிறோம் நம்முடைய கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது சோமநாதபுரம் கோவில் இடித்த ஆண்டுக்கான அந்த நிகழ்வை இன்னைக்கு ஒரு சிவன் கோவிலுக்கு சென்று சாந்தி மந்திரம் சொல்வதற்காக இன்னைக்கு போகிறோம் திருப்பரங்குன்றம் விவகராம் உங்களுக்கே தெரியும் எதிர்காலத்தில் நம்முடைய சந்ததிகளை பாதுகாப்பதற்கு பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய ஒவ்வொருவருடைய பங்கும் நாட்டிற்கு தேவை என்றார்.

