கோவை: திமுக அரசாங்கம் மண்னை விட்டு அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபின் தெரிவித்துள்ளார்.
பாஜக தொழில்துறை வல்லுனர் பிரிவு சார்பில் Professional Connect 2026 எனும் தொழில்துறையினருக்கான கருத்தரங்கம் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமரின் குறிப்பிட்ட உன்னத பாரதம் என்பதை நோக்கி நகர்ந்து வருகிறோம் என்றார். தமிழகத்தை பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சி நல்லபடி உள்ளது என்றும் அதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
இங்கு பல்வேறு தரப்பு மக்கள், தொழில் வல்லுனர்களை பார்க்க முடிகிறது, GST புரட்சியால் இந்த தொழில் வல்லுனர்கள் பயன்பெற்றுள்ளனர் என்றார்.
மோடி தமிழகத்தின் முன்னேற்றதிற்கு அரும்பாடு பட்டு கொண்டிருக்கிறார் என்றும் கோவை தமிழகத்தில் முன்னேறிய நகரமாக உள்ளது, அதற்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தவர் பிரதமர் என்றார்.
கோவைக்கு வந்தே பாரத் ரயில் கொடுத்துள்ளார் கோவையில் டெக்ஸ்டைல் துறையில் பல்வேறு சலுகைகளை கொடுத்துள்ளது நம் அரசு என்றார்.
இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் என்றார்.
வீடுகட்டும் திட்டத்தில் 90 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது, லஞ்ச லாவண்யம் இல்லாத அரசை கொடுக்க வேண்டும் என்பது பிரதமரின் கனவு என கூறிய அவர் திமுக லஞ்ச லாவண்யத்தில் ஊறி கொண்டிருக்கிறார்கள் அவர்களுடன் காங்கிரசும் சேர்ந்துள்ளது என்றார்.
கொங்கு பகுதி முன்னேற்றத்திற்கான பகுதி, ஆனால் துர்பாக்கியமாக பெண்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது, கல்லூரி மாணவிகள் மீது அட்டூழியங்கள் நடைபெறுகிறது, திமுக அரசாங்கம் மண்னை விட்டு அகற்றப்பட வேண்டும் என இதிலிருந்து தெள்ள தெளிவாக தெரிகிறது என்றார்.
முன்னேற்றத்தை பொறுத்தவரை பிரதமர் தமிழகம் மீது கவனம் செலுத்தி வருகிறார், தமிழ் தமிழன் மீது அட்டூழியங்கள் நடைபெறுகிறது, சில அமைச்சர்களின் பேச்சு அறுவருக்கத்தக்க வகையில் உள்ளது என்றும் நம் ஆன்மீகம் மீது கொச்சையாக பேசி வருகிறார்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நம்மை அடித்து வெளியேற்றினார்கள் என்றார்.
நம் குரல் அனைத்து இடங்களிலும் ஒலிக்க வேண்டும், நல்ல அரசாங்கம் அமைய வேண்டும் என சபதம் ஏற்போம் வளர்ந்த பாரத்திற்கு நமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
காசி தமிழ் சங்கம் மூலம் தமிழை பிரதமர் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்றிருக்கிறார் வெற்றிவேல் வீரவேல் ஜெய் தமிழ் ஜெய் பாரத் என கூறி நிறைவு செய்தார்.

