கோவை: ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் போலீஸ் கமிஷனர்.
ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வாகன ஓட்டிகளுக்கு மாநகர காவல் ஆணையர் ஹெல்மெட் வழங்கினார்.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் கோவை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஹெல்மெட் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று லட்சுமி மில்ஸ் அருகே வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.
மேலும் சாலை பாதுகாப்பு வாகன ஓட்டிகள் பாதுகாப்பு ஆகியவை பற்றி மாநகர காவல்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் இனி தவறாது ஹெல்மெட் அணிந்து வர வேண்டுமென் வலியுறுத்திய அவர் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

