கோவை: கூட்டமைப்பு பணிகளை மலையாள படங்களில் இருந்து தான் கற்றுக்கொண்டதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா நாதன், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.
அதனைத் தொடர்ந்து திரைப்படக் குழுவினர் பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று பார்வையாளர்களிடம் திரைப்படம் குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர். அதன்படி இப்படத்தின் குழுவினர் நேற்று மாலை கோவை பிராட்வே திரையரங்கில் பார்வையாளர்களை சந்தித்து படம் குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்பொழுது பேசிய நடிகர் ஜீவா, திரைப்படத்தை அனைத்து தரப்பினரும் நிறைவாக நினைப்பதாக குறிப்பிட்டார். இந்த திரைப்படத்தில் கோவையை சேர்ந்த பல்வேறு நடிகர்களும் இருப்பதாக தெரிவித்தார். இயக்குனர் மீது தமிழக மக்கள் அனைவரும் அன்பைப் பொழிந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோன்று பல்வேறு படங்களை அவர் செய்ய வேண்டும் எனவும் பல்வேறு நடிகர்களையும் வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறினார்.
இந்தத் திரைப்படம் ஒரு மகிழ்ச்சியான வெற்றியாக அமைந்திருப்பதாகவும் தனக்கும் ஒரு Came Back கொடுத்திருப்பதாக தெரிவித்தார். மலையாளத்திலிருந்து வரும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் அவர்களும் போட்டி போட்டு நடிப்பார்கள் என்று தெரிவித்த அவர் எனக்கும் அதிக நடிகர்களை வைத்து படம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும் இந்த கதையை இயக்குனர் என்னிடம் கூறிய பொழுது மிகவும் பிடித்து போய் இதனை செய்திருப்பதாகவும் நிச்சயமாக இனி தொடர்ந்தும் இதுபோன்று பல்வேறு படங்கள் வரும் என தெரிவித்தார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி இல்லை என்று தெரிவித்த ஜீவா டூயட், காதல் சீன்களை எல்லாம் தவிர்த்து இருக்கிறோம் இது தங்களுக்கு ஒரு புதுமையாக உள்ளது என கூறினார்.
தற்பொழுது சினிமா மார்க்கெட்டு மிகவும் பெரிதாகி விட்டதாக குறிப்பிட்ட ஜீவா 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்தால் 5 கோடி ரூபாய்க்கு மார்க்கெட்டிங் செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். Pan India என்பது பெரிய விஷயமாக இருப்பதாகவும் இதே படத்தை தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் செய்யும் பொழுது அதற்கான மார்க்கெட்டிங்கும் பெரிதாவதாக தெரிவித்தார்.
இந்த படத்திற்கான Memes கள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் தற்போது நாம் Memes Culture ல் இருப்பதாகவும் அது தற்பொழுது தங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றும் மொக்கை படங்களாக எடுத்தால் அது தங்களுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
கோ படத்திற்குப் பிறகு அதிகமான படங்களை நடித்து விட்டதாகவும் ஆனால் மக்கள் பலரும் கோ படத்தையே தான் பெரிதும் குறிப்பிடுவதாக தெரிவித்தார். கொரோனாவிற்கு பிறகு தன்னுடைய எக்ஸ்போசர் குறைந்து விட்டதாக கூறிய அவர் நான் எங்கும் செல்லவில்லை இங்கு தான் இருக்கிறேன் ஒவ்வொரு முறையும் என்னுடைய முயற்சிகளை எடுத்துக் கொண்டே தான் இருக்கிறேன் தொடர்ந்து அந்த முயற்சிகளை மேற்கொண்டு தான் வருவேன் என தெரிவித்தார்.
ஒரு கூட்டமைப்பு வைத்து அனைவரும் இணைந்து படத்தில் பணியாற்றுவது என்பது மலையாள படத்தை பார்த்து தான் வந்தது என்றும் குறிப்பாக மஞ்சுமல் பாய்ஸ் படத்தை பார்த்து தான் அந்த பழக்கம் வந்ததாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் இதுபோன்று அனைவரும் இணைந்து பணியாற்றினால் சுமைகள் குறையும் என்றும் மல்டி ஸ்டார்கள் படங்கள் செய்யலாம் சினிமாவும் நன்கு வாழும் என தெரிவித்தார்.
மேலும் கூட்டமைப்புடன் பணியாற்றுவதால் 30 நாட்களில் படங்களையும் முடித்து விடுவதாகவும் தெரிவித்தார். முருகர் வைத்து ஒரு படம் செய்ய இருப்பதாகவும் அது குறித்து ஒரு முக்கியமான நபரிடம் பேசி வருவதாகவும் தெரிவித்த அவர் அது Pan India படமாக மட்டுமல்லாமல் Pan World படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த படத்திற்கு பல்வேறு பெயர்கள் யோசித்ததாகவும் அதன் பிறகு தான் இந்த படத்தின் டயலாக் ரைட்டர் இந்த பெயரை வைத்ததாகவுன் அதனை Short செய்து TTT என வைத்தது அசோசியேட் எடிட்டர் என தெரிவித்தார்.
திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி தற்பொழுது வரை எந்த பிளேனும் இல்லை என்றும் இதே காம்பினேஷனில் வேறு படங்கள் எடுக்கலாம் என இயக்குனர் நிதிஷ் சகாதேவ் தெரிவித்தார். இந்த கதை 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் எடுப்பதற்காக எழுதப்பட்ட கதை என்றும் ஆனால் அந்த காலகட்டத்தில் அது நடக்காமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்ட அவர் தற்பொழுது ஜீவாவிடம் கதை கூறியதும் அவர் ஒப்புக்கொண்டு படத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பேசிய பட குழுவினர் இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் மக்களின் உணர்வுகள் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

