கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவியை சக வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் அதே வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருபர் நண்பராக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவி மற்ற மாணவர்களுடன் பேசுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. அம்மாணவர் அந்த மாணவியை வேறு சில மாணவர்களுடன் பேசக்கூடாது என கூறியுள்ளார் . இந்த நிலையில் மாணவி கல்லூரிக்கு வந்தபோது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த அந்த மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மாணவியை தாக்கி உள்ளார். பலத்த காயம் அடைந்த அந்த மாணவி அதே கல்லூரி நிறுவனத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எந்த காலேஜ்னு போட்டு இருந்திருக்கலாமே ஆசிரியரே…
Kg college, kg hospital
எவனும் படிக்க வரமாதிரி தெரியவில்லை. இந்த இளைஞர் சமுதாயம் தன் கெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வளர்ப்பு சரி இல்லை. பயம் இல்லை. பணம் இருக்கிறது. புத்தி இல்லை!!!