கோவையில் கல்லூரி மாணவிக்கு கத்திகுத்து- சக மாணவர் கல்லூரி வளாகத்திலேயே வெறிச்செயல்…

கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவியை சக வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் அதே வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருபர் நண்பராக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவி மற்ற மாணவர்களுடன் பேசுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. அம்மாணவர் அந்த மாணவியை வேறு சில மாணவர்களுடன் பேசக்கூடாது என கூறியுள்ளார் . இந்த நிலையில் மாணவி கல்லூரிக்கு வந்தபோது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அந்த மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மாணவியை தாக்கி உள்ளார். பலத்த காயம் அடைந்த அந்த மாணவி அதே கல்லூரி நிறுவனத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

3 COMMENTS

  1. எந்த காலேஜ்னு போட்டு இருந்திருக்கலாமே ஆசிரியரே…

  2. எவனும் படிக்க வரமாதிரி தெரியவில்லை. இந்த இளைஞர் சமுதாயம் தன் கெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வளர்ப்பு சரி இல்லை. பயம் இல்லை. பணம் இருக்கிறது. புத்தி இல்லை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

திமுக கூட்டணி கலகலத்து விட்டது- கோவையில் நயினார் நாகேந்திரன் பேச்சு…

கோவை: தி.மு.க கூட்டணி கலகலத்து விட்டது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை, வடவள்ளி கல்வீரம்ப்ளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மோடி முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில்...

Video

ஆட்டோவில் கிடைத்த தங்க நகை… வீடு தேடி ஒப்படைத்த கோவை டிரைவர் – வீடியோ காட்சிகள்

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு பவுன் தங்க பிரேஸ்லெட்டை வீடு தேடி சென்று ஒப்படைத்த கோவை டிரைவர் மணிகண்டன் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
Join WhatsApp