கோவை: மாணவர்களுக்கு மூன்று அட்வைஸ் வழங்கிய இஸ்ரோ தலைவர் நாராயணன்.
கோவை மாவட்டம் நவக்கரையில் உள்ள ஏஜேகே கல்லூரியில் தேசிய அளவிலான ஏஜேகே சிறந்த கல்வியாளர் விருதுகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளித்துறை தலைவரும் மற்றும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தலைவருமான நாராயணன்,மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவருமான டாக்டர் ஜோ.கே கிழக்கூடன் ஆகியோர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி,ஆந்திரா மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விருதுகள் வழங்கி கெளரவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன்,
விண்வெளி திட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது அதில் விண்வெளியில் விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டம்,ஆட்களை நிலாவுக்கு அனுப்பி திருப்பி வரக்கூடிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை 60-க்கும் மேற்பட்ட நாடுகளும் சேர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.
இந்தியா மாணவர்களுக்கு Practical மற்றும் Theory படிக்க வேண்டும்,படிப்பு மட்டுமல்லாமல் Over all Performance பண்ண வேண்டும் அதேபோல் நல்ல மாணவர்களாக வளர வேண்டும் ஆகிய மூன்று அறிவுரைகளை மாணவர்களுக்கு கூறினார்.
PSL ராக்கெட் நான்கு கட்டமாக செயல்படுத்தி வருவதாகவும் அதில் மூன்றாவது கட்டத்தில் பாதி மாறி சென்று விட்டது அதற்கு தற்பொழுது படித்து வருவதாகவும் மேலும் இதற்கும் கன்யாவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை தெரிவித்தார்.

