கோவையில் உடல் உறுப்பு தானம்- சீறி பாய்ந்து சென்ற ஆம்புலன்ஸ்…

கோவை: மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சீறி பாய்ந்து சென்றது.

தர்மபுரி அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச்சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் ஆறு பேருக்கு தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த பொம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகன் மதன் குமார். காதலித்து திருமணம் செய்த இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கடந்த 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அரூர் எடுத்த செந்தில் பாடி என்ற இடத்தில் அடையாளம் ஏதும் இன்றி அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.

தொடர்ந்து கரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை மோசமாக இருந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள அபிராமி மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி இன்று காலை அவர் மூளைச் சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து மதன்குமாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்த சூழலில் மதன்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அபிராமி மருத்துவமனை தலைவர் மருத்துவர் பெரியசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழக சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்து உடலுறுப்பு தானம் குறித்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரது இருதயம்,கண்கள்,கல்லீரல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதுகாப்புடன் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் பாக்கணும் போல கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி இருதயம் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு கண்கள் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கும்,கல்லீரல் சேலம் தனியார் மருத்துவமனைக்கும் உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக இது குறித்து பேசிய மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார், கடந்த ஐந்து நாட்களாக இளைஞர் மதன்குமாரை காப்பாற்றுவதற்கு தங்களது மருத்துவ குழுவினர் கடுமையாக போராடியதாகவும் இருப்பினும் இன்று காலை அவரது உறுப்புகள் செயல் இழந்து அவர் மூளைச் சாவு அடைந்ததாகவும் முளைச்சாவது அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறினார். உங்களிடம் அவரது மரணத்தின் மூலம் எட்டு பேர் உயிர் காப்பாற்றப்பட இருப்பதாகவும் பலர் மூலமாக மதன்குமார் மீண்டும் வாழ்வார் எனவும் நெகழ்ச்சியுடன் கூறினார்.

இதை போல் தங்களது சகோதரர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்ததும் எந்த ஒரு அடையாளமும் இன்றி அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் மோதியதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் வேதனை தெரிவித்த அவரது உறவினர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறையினரும் வேகத்தடைகள் இருக்கும் இடங்களில் அடையாளக் குறியீடு வைக்க வேண்டும் எனவும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp