கோவை: கோவையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பார்வையாளராக பங்கேற்று பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. மாவட்ட அளவில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இன்று காலை தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம சபை கூட்டங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளில் இன்று நடத்தப்பட்டன.
அதன்படி கோவையிலும் கிராம சபை கூட்டங்கள் பல்வேறு ஊராட்சிகளில் நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி ஊராட்சியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழா சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
குறிப்பாக இந்த கிராம சபை கூட்டத்தில் மதுக்கரை மரப்பாலம் தொடர்பாகவும், சுங்க சாவடி பிரச்சனை தொடர்பாகவும் பொதுமக்கள் அதிகளவு மனுக்களை அளித்துள்ளனர்.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சங்கேத் பல்வந்த், ஊராட்சி உதவி இயக்குனர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

