கோவையில் மதராஸ் மாணவர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினம் கொண்டாட்டம்…

கோவை: மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

நாட்டின் 77 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் முனைவர் சுப்ரமணியன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி குடியரசு தின விழா உரையை நிகழ்த்தினார். மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.

77 வது குடியரசு தினத்தின் கருப்பொருளான “வந்தே மாதரம் 150 ஆண்டுகள்” “ஆத்மநிர்பர் பாரத்” என்ற நோக்கத்தை வலியுறுத்தினார். மேலும் சீர்திருத்தம் செயல் படுத்துதல் மாற்றம் என்ற கொள்கைகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு இந்தியரும் வலிமைமிக்க புதுமையான இந்தியாவை உருவாக்க பங்களிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் செந்தில் மற்றும் செயலாளர் பூமிராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பல்கலைக்கழக பொறுப்புத் துணைவேந்தரை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பொறுப்புத் துணைவேந்தர் சுப்ரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் 2023-2026 காலகட்டத்தில் பணியாற்றிய மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு நிர்வாக குழு உறுப்பினர்களின் சேவையை நினைவு கூர்ந்தும் மதராஸ் வேளாண் இதழ் வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய முக்கிய பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp