JOB NEWS: UCO வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க லிங்க் இதோ…UCO வங்கியில் 173 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு பணியிடங்களை நிரப்பும் விதமாக B.E, B.Tech, MBA, CA, M.Sc, MCA, படித்தவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியில் இணைய 20 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும், 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இதில் 5 வருட தளர்வு வழங்கப்படுகிறது. மற்ற பின்தங்கிய வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது.
எழுத்துத் தேர்வு, குழு உரையாடல் மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
ஊதியம்:
வெவ்வேறு பணிகளுக்கும், பணித்தன்மை அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது: ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 2ம் தேதி கடைசி தேதி. விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாம் விண்ணப்பிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.175-ஐ விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.800-ஐ விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
பணியில் விண்ணப்பிக்க லிங்க்:https://onlineappl.ucoonline.bank.in/SPE_RCER/
தேவைப்படுவோர்க்கு பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே..!

