Sivaji Krishnamoorthi: திரிசா பாதுகாப்பா தானே இருக்கு… கோவையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை பேச்சு! VIDEO

கோவை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஜய் சொல்கிறாரே, அவர் பாதுகாப்பாத்தானே இருக்கார். நாங்கள் ஏதாவது செய்துவிட்டோமா என்று கோவையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.

கோவையில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

ஒரு நாள் சிறைக்குள்ளே வைத்தால் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு வரும் காலத்தில் 472 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு கோவையை மீட்க வந்திருக்கிறார் செந்தில்பாலாஜி.

அம்மாவுக்கு மட்டும் பணம் கொடுக்கிறீர்களே, ஸ்டாலின் தாத்தா படிப்புக்கு பணம் வேண்டும் என்று பெண் குழந்தைகள் பணம் வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்தார் முதல்வர்.

இதைப் பார்த்துவிட்டு பசங்கள் எங்களுக்கும் செலவு இருக்கிறது தாத்தா என்று கேட்டனர். அவர்களின் படிப்பு செலவுக்கும் 1000 ரூபாய் கொடுத்தார். குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், தோழி விடுதிகள் என்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காக கொடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் வீட்டில் இருக்குமாறு உலகமே சொன்னது. முடி திருத்துபவர் வந்தால் கொரோனா வந்துவிடும் என்று பிரதமர் மோடி தனது தாடியை டிரிம் செய்யாமல் இருந்தாரே. தனியாக இருங்கள் கொரோனா வந்துவிடும் என்று உலக பிரதமர்களும் சொன்னார்கள்.

ஆனால், ஒன்றிணைவோம் வா என்று சொன்ன ஒரே தலைவர் ஸ்டாலின் தான். சொல்லிவிட்டு சும்மா இருக்கவில்லை. ஒரு செல்போன் எண் கொடுத்தார். அரிசி, பருப்பு எல்லாம் வந்துதா இல்லையா?

வீடுதேடி பொருட்கள் வந்தன. இந்த பணியின் காரணமாக சென்னையில் அன்பழகன் என்ற ஒரு எம்எல்ஏ இறந்தே போனார். எங்கள் உயிரைக் கொடுத்து உங்களைக் காப்பாற்றினோம். அன்று முதல்வராக இருந்த பழனிசாமியிடம் மக்களுக்காக 5000 ரூபாய் கொடு என்றார். ஆனால் வெறும் 1000 ரூபாய் தான் கொடுத்தார்.

இந்த கட்சியில் நான் கவுன்சிலர் ஆகப்போறேனா? எம்எல்ஏ ஆகப்போகிறேனா? ஒன்றும் கிடையாது. இந்தாலும் கஷ்டப்படுகிறேன். ஏன் என்றால் எங்கள் தாத்தா கருணாநிதி தொடங்கிய கட்சி என்பதால் தான் இருக்கிறேன்.

பெண்களை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம். பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்று நம்புகிறோம். இந்தியாவில் 100 பெண்கள் வேலைக்குப் போனால் தில் 45 பேர் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பெண்கள் தான்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார் விஜய். நான் விஜய்யை கேட்கிறேன், திரிசாவை நாங்கள் ஏதாவது செய்துவிட்டோமா? பாதுகாப்பாதானே இருக்கிறார். ஆனால் உங்க அளவுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது.

இப்போது லஞ்சம் வாங்க மாட்டான் என்கிறார் விஜய். 1.15 கோடி ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றினீர்களே. இரண்டு நாட்கள் டெல்லியில் வைத்து திருப்பினார்களே, அங்கு பேச வேண்டியது தானே.

மழை, புயல், கொரோனா காலத்தில் மக்களுக்கு என்ன செய்தார். 42 பேர் இறந்தபோதும் விட்டுவிட்டு ஓடினார்தானே.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp