சிவானந்தா காலனியில் 31ம் தேதி மின்தடை!

கோவை: சிவானந்தா காலனியில் ஜனவரி 31ம் தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை துணை மின் நிலைய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டாடாபாத் துணை மின் நிலையத்தில் வருகிற 31ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு (பகுதி), நாராயண குரு ரோடு, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், என்எஸ்ஆர் சாலை, பாரதி பார்க் க்ராஸ் 1, 2, 3,

ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை பகுதி, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ மில்ஸ், ராம்நகர்,

அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி, அலமு நகர் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp