Coimbatore weather: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பின் படி, இந்த வாரம் கோவையில் வெப்ப நிலை மெல்ல அதிகரிக்கிறது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், தற்போது வெப்பம் அதிகரிப்பதை இது உணர்த்துகிறது.
அதன்படி, ஒவ்வொரு நாளுக்கான வானிலை முன்னறிவிப்பை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
கோவை வானிலை நிலவரம்
29 ஜனவரி 2026 – வியாழன்
இன்று கோவையில் பகுதியளவு மேகமூட்டம் நிலவும். பகல் நேரத்தில் வெப்பநிலை 31°C, இரவில் 19°C வரை குறையும்.
30 ஜனவரி 2026 – வெள்ளி
கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளை வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31°C, குறைந்தபட்சம் 19°C.
மழைக்கான எந்த எச்சரிக்கையும் இல்லை.
31 ஜனவரி 2026 – சனி
சனிக்கிழமையன்று கோவையில் வெப்பநிலை சற்று அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 32°C, குறைந்தபட்சம் 18°C ஆக இருக்கும்.
மிதமான வெப்பத்துடன் பகுதியளவு மேகமூட்டமும் இருக்கும்.
1 பிப்ரவரி 2026 – ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்டத்தில் வானிலை உலர்ந்ததாக இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை 32°C வரையும் குறைந்தபட்சம் 19°C வரையும் பதிவாகலாம்.
2 பிப்ரவரி 2026 – திங்கள்
கோவையில் திங்கட்க்கிழமை பகுதியளவு மேகமூட்டத்துடன் வெப்பமான சூழல் நிலவும்.
பகல் வெப்பநிலை 32°C, இரவில் 20°C வரை பதிவாகும்.
3 பிப்ரவரி 2026 – செவ்வாய்
மாவட்டத்தில் தொடர்ச்சியாக வெப்பம் நிலவும்.
அதிகபட்ச வெப்பநிலை 32°C, குறைந்தபட்சம் 20°C.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

