அன்னூரில் பதுங்கியிருந்த பங்களாதேஷியர்கள்!

கோவை: அன்னூர் அருகே பதுங்கி தனியார் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்து வந்த 11 பங்களாதேஷியர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆயத்த ஆடை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்களாதேஷை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அந்த நிறுவனத்திற்குச் சென்ற பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். பங்களாதேஷை சேர்ந்த 11 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களை அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அவர்கள் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா? என விசாரித்து விட்டு சேலம் ஆத்தூரில் உள்ள அகதிகள் முகம்முக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பகுதியில் மேலும் யாரேனும் சட்டவிரோதமாக தங்கியுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp