Header Top Ad
Header Top Ad

குமரகுரு கல்லூரியில் பிரம்மாண்டமாய் அரங்கேறிய யுகம்!

கோவை: குமரகுரு கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப-கலாச்சார விழாவான யுகம் 2025 பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

‘மேனிஃபெஸ்ட்’ என்ற கருப்பொருளுடன் மூன்று நாட்கள் நடைபெற்ற யுகம் விழாவில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 12,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement
Lazy Placeholder

இதில் 150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், 45 பயிற்சி முகாம்கள் மற்றும் 5 மாநாடுகள் நடத்தப்பட்டன. மேலும், கும்பா எனப்படும் மாஸ்காட் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாணவர் காலநிலை செயல் மாநாடு, இன்ஸ்பயர் இந்தியா யூத் கான்கிளேவ் 2025, சைபர் மற்றும் கோவ்.ஏ.ஐ மாநாடுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தின.

நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியில் 70 ஸ்டால்களை மாணவர்கள் அமைத்தனர்.

Advertisement
Lazy Placeholder

இந்த விழாவிற்கு, TVS, கரூர் வைசியா வங்கி (KVB), LGB ரோலான் மற்றும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி சங்கம் (ISTE) போன்ற நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தனர்.

மாணவர்களின் திறனை உலகளவில் வெளிப்படுத்தும் விதமாக குமரகுரு சொசைட்டி ஃபார் குளோபல் டிப்ளமேசி (K-SGD) மன்றம் தொடங்கப்பட்டது.

யுகம் 2025, புதுமை, படைப்பாற்றல் மற்றும் சமூக தாக்கத்தைக் கொண்டாடி, மாணவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்க புதிய வழிகளை அறிமுகப்படுத்தியது.

Recent News

Latest Articles