Header Top Ad
Header Top Ad

சூரிய ஒளியில் சுனிதா வில்லியம்ஸ்: கோவை கலைஞர் அசத்தல்!

கோவை: பூதக்கண்ணாடியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி சுனிதா வில்லியம்ஸ் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பியுள்ளார். பலரும் அவரது வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் UMT ராஜா என்பவர் பூதக்கண்ணாடியால் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, சுனிதா வில்லியம்ஸ் ஓவியத்தை மரப் பலகையில் வரைந்துள்ளார்.

இந்த ஓவியத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவர் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம் ஆகிய படங்களும், Welcome Back Sunita என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

Advertisement

சுமார் 10 மணி நேரம் செலவழித்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளதாகத் தெரிவித்த ராஜா, வாய்ப்பிருந்தால் இதனை சுனிதாவிடம் வழங்க வேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவித்தார்.

Recent News