Header Top Ad
Header Top Ad

கோவையில் உதயநிதி நிகழ்ச்சி திடீர் ரத்து!

கோவை: கோவையில் உதயநிதி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி ஹாக்கி மைதான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் நாளை நடைபெறுவதாக இருந்தது.

மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல், வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதனிடையே, “கோவையில் துணை முதலமைச்சரின் நாளைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.” என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

துணை முதலமைச்சர் வருகையை ஒட்டி, பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்த தி.மு.க. தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Recent News