சூலூரில் சூடு தாங்கல… தர்பூசணி விநியோகித்த த.வெ.க தொண்டர்கள்!

கோவை: கோடை காலத்தை முன்னிட்டு த.வெ.க தொண்டர்கள் சூலூரில் பொதுமக்களுக்கு தர்பூசணியுடன் நீர் மோர் வழங்கினர்.

கோவையில் கோடை வெயில் வாட்டி வருகிறது. தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்பினர் கோவையில் சில பகுதிகளில் இலவச நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், த.வெ.க.,வின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாபு தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில் இலவச நீர்மோருடன் தர்பூசணி பழத்தையும் வழங்கினர்.

பொதுமக்களுக்காக தினமும் அப்பகுதியில் குடிநீர் வைக்கப்படும் என்றும் த.வெ.க.,வினர் தெரிவித்தனர்.

Recent News

Video

Join WhatsApp