கோவை: கோவையில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உறவினர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை நல்லாம்பாளையம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக சைல்டு லைனுக்கு புகார் கிடைத்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய சைல்டு லைன் மேற்பார்வையாளர் கிருஷ்ணகுமாரி இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அவரது சொந்த தாத்தா (வயது 75) (சிறுமியின் அடையாளங்கள் வெளியாகலாம் என்பதால் உறவினர்களின் பெயரை வெளியிட முடியாது) மற்றும் அவரது சித்தப்பா (வயது 33) ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
இதனிடையே, இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.