குடியிருப்புக்கு நடுவே ‘குடி’: கோவையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம்!

கோவை: குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோவையில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ளது. பல்வேறு கட்சியினரும் டாஸ்மாக் கடைகள் கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள், மது ஒழிப்பு மாநாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே கோவையில், க.க.சாவடி-வேலந்தாவளம் சாலை அருகே, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதனால் அருகிலுள்ள குடியிருப்பில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

இந்த மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

க.க.சாவடி-யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் அதிகமானோர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

டாஸ்மாக் கடை மூடாவிட்டால், நீக்கப்படவில்லை என்றால், ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று த.வெ.க.வினர் தெரிவித்தனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group