உக்கடத்தில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்!

கோவை: உக்கடம் பகுதியில் வாலிபர் ஒருவர் மீது சரமாரியாக நடத்திய தாக்குதலில், நிலைகுலைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உக்கடம் நரசிம்மர் கோயில் அருகே இன்று காலை 2 பேர் ஒருவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் சரிந்து விழுந்தார்.

Advertisement

இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் படுகாயத்துடன் கிடந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இதனையடுத்து போலீசார் அவரை தாக்கிய 2 வாலிபர்களைப் பிடித்து அவர்கள் யார்? எதற்காக மோதலில் ஈடுபட்டனர் என்பது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் அதிக நடமாட்டமுள்ள இந்த பகுதியில் ஒருவரை இருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video