கோவை: கோவை சிறையில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாக விசாரணைக் கைதி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விசாரணைக் கைதி ஒருவரை கோவை சிறைக்கு அழைத்து வரும் போது, சிறையில் சக கைதிகள் முன்பு தன்னை நிர்வாணப்படுத்தி, உடல் உறுப்புகளுக்குள் விரல் விட்டு சோதனை செய்ததாக, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சோதனை என்ற பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இன்று நடைபெற்ற விசாரணையில், சிறையில் மனித உரிமை மீறல் என்ற வழக்கில், இரண்டு வாரங்களில் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.